Cinema

தற்கொலை முயற்சி வீட்டில் சுயநினைவின்றி கிடந்த பிரபல நடிகை!

தெலுங்கு தொலைக்காட்சி நடிகை மைதிலி தூக்க மாத்திரைகளை அதிகளவில் எடுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவர் நடிகை கட்டா மைதிலி.

இவர், பிரீசர் எனப்படும் ரம் வகையை சேர்ந்த மதுபானம் 8 பாட்டில்கள் மற்றும் தூக்க மாத்திரைகளை ஒரே நேரத்தில் எடுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டாவில் திங்கள்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. அன்று மாலை மைதிலி, காவல்நிலையத்திற்கு போன் செய்து தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, அவரிடம் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் இல்லையெனில் தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் கூறியது போன்றே தற்கொலைக்கு முயன்ற நிலையில், பொலிசாருக்கு இந்த தகவலும் தெரியவந்துள்ளது.

சுயநினைவற்ற நிலையில் மைதிலி
இதையடுத்து மைதிலியின் தொலைபேசி சிக்னலை வைத்து அவரது வீடு இருக்கும் பகுதியை கண்டறிந்து உடனடியாக போலீசார் அங்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் மைதிலி சுயநினைவற்ற நிலையில் கிடந்த மைதிலியை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதனிடையில் கடந்தாண்டு செப்டம்பர் 27ம் தேதி தனது கணவர் ஸ்ரீதர் ரெட்டி மற்றும் 4 பேருக்கு எதிராக துன்புறுத்தல் புகார் அளித்திருந்த நிலையில் இதன் முதற்கட்ட விசாரணை தற்போது தான் முடிந்துள்ளது.

இதேபோன்று சூரியபேட்டை மாவட்டத்தில் உள்ள மோத்தி காவல் நிலையத்திலும், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக மைதிலி புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading