Local

தலைவராக ரணில் கடும் கோபத்தில் சஜித் குழுவினர்

ஐ.தே.கவின் தலைவராக தொடர்ந்தும் ரணிலே செயற்படுவார்! பச்சைக்கொடி காட்டியது மத்தியசெயற்குழு!! சஜித் அணி கடுப்பில்!!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் செயற்படுவதற்கு கட்சியின் மத்தியசெயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைப்பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கி அவரை பிரதமர் வேட்பாளராக களமிறக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் இன்று (30) மாலை கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் கூடியது.

எனினும், சஜித் ஆதரவு அணியிலுள்ள உறுப்பினர்கள் சிலர் இக்கூட்டத்தை புறக்கணித்தனர் என்றும், முக்கிய உறுப்பினர்கள் சிலர் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலேயே இவ்வாறு புறக்கணிக்கப்பட்டது எனவும் கூறப்படுகின்றது.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் கூடவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading