World

தாஜ் மஹாலில் வழிபாடு – வெடித்தது சர்சை ! பாதுகாப்பும் உச்சம்!!

உலக அளவில் இந்தியாவின்  அடையாளமாக விளங்குகிறது தாஜ் மஹால். அதன் மீதான சர்ச்சைகளும் சமீபகாலமாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது. தாஜ் மஹாலுக்குச் சென்று தொழுகை நடத்த முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்து அமைப்பைச் சார்ந்த பெண்கள் சிலர் கங்கைத் தீர்த்தம் தெளித்தும் ஊதுவத்தி ஏற்றி பூஜை செய்வது போன்ற காணொளி சமூக வலைதளங்களில் பரவியது.

அயோத்தியில் பாபர் மசூதி விவகாரத்தில் சர்ச்சை நீடிப்பதைப் போலவே, தாஜ் மஹால் முதலில் சிவன் கோயிலாக இருந்தது என சில இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் உரிமை கொண்டாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகதான் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்து அமைப்பைச் சேர்ந்த பெண்கள் சிலர் தாஜ்மஹாலுக்குள் நுழைந்தனர். யாரும் எதிர்பாராத விதமாக தங்கள் கையில் வைத்திருந்த பொருள்களை வைத்து பூஜைகளை நடத்தினர். அந்திராஷ்டிர இந்து பரிஷத் அமைப்பின் மாவட்டத் தலைவரான மீனா தேவி திவாகர் இது குறித்து குறிப்பிடும்போது, “ முஸ்லிம்களுக்கு எல்லா நாள்களும் தாஜ்மஹாலுக்கு சென்று தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவதுபோல, எங்களுக்கும் பூஜைகள் நடத்த அனுமதி வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading