Local

தாமரை மொட்டியிலிருந்தே அடுத்த ஜனாதிபதி தெரிவு !

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஶ்ரீலங்கா  பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவராகவே இருப்பார் என்று, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

” 2019ஆம் ஆண்டு முடிவுக்குள்,  சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையிலான புதிய கூட்டணியில் இருந்து ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படுவார்.

கடந்த தேர்தலில் சில மாவட்டங்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி ஆகிய கட்சிகளை விட, சிறிலங்கா பொதுஜன முன்னணி அதிக பலத்தை நிரூபித்திருக்கிறது.

எதிர்காலத் தேர்தல்களில் அதனை விடப் பெரிய பலத்தைப் பெறும்.

தற்போது தமது கட்சியின் இலக்கு ரணில் விக்கிரசிங்கவோ, சஜித் பிரேமதாசவோ அல்லது நவீன் திசநாயக்கவோ அல்ல .அனைத்துலக சூழ்ச்சிக்காரர்களையே நாம் இலக்கு வைக்கின்றோம்.” என்றும் பஸில் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading