Local

திரிபீடகத்தை உலக மரபுரிமையாக்ககோரும் யோசனை யுனெஸ்கோவிடம் கையளிப்பு

திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்த கோரும் யோசனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், யுனெஸ்கோ அமைப்பின் பிரதிநிதியிடம் இன்று ( 23) கையளிக்கப்பட்டது.

இதற்கான தேசிய நிகழ்வு மூன்று நிக்காயாக்களினதும் மகாநாயக்க தேரர்களின் தலைமையில் கண்டி, தலதா மாளிகையில் நடைபெற்றது.
 
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
 
ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தர தூதுவர் ஹானா சிங்கர் உள்ளிட்ட ஐ.நா. அமைப்பின் விசேட பிரதிநிதிகள், வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading