Cinema

திருமண நாளில் ஆதரவற்ற 16 ஆயிரம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கிய நயன்தாரா!

திருமண நாளில் ஆதரவற்ற குழந்தைகளுக் மதிய உணவு ரியல் வாழ்க்கையிலும் தான் “லேடி சூப்பர்ஸ்டார்” என நிரூபித்துள்ளார் நடிகை நயன்தாரா

நயன்தாரா திருமணத்தில் கலந்துகொள்வதற்காக காலை முதலே ஏராளமான திரையுலக பிரபலங்கள் மகாபலிபுரம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

நடிகை நயன்தாராவின் திருமண வேலைகள் ஒருபுறம் பிசியாக நடைபெற்று வந்தாலும், அவர் திருமண நாளில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக மிகப்பெரிய உதவி ஒன்றை செய்துள்ளாராம். இன்று மதியம் தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் உள்ள 16 ஆயிரம் குழந்தைகளுக்கு மதிய உணவு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளாராம்.

நயன்தாராவின் செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இந்த செயலின் மூலம் ரியல் வாழ்க்கையிலும் தான் ஒரு லேடி சூப்பர்ஸ்டார் என நயன்தாரா நிரூபித்து உள்ளதாக அவரை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை நயன்தாராவின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக ஏராளமான திரையுலக பிரபலங்கள் மகாபலிபுரம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading