Jobs

தெங்குச் செய்கையில் அதிக விளைச்சலுக்காக DIMO Agribusinesses இடமிருந்து வெற்றிகரமான தீர்வுகள்

உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம்நாட்டின் கேள்வியை பூர்த்தி செய்யும் அளவுக்கு சந்தையில் தேங்காய் விநியோகம் இல்லாததால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை என்பது தெளிவாகிறதுஇதற்குத் தீர்வாகதென்னங் காணிகளின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காகதெங்குச் செய்கையை இலக்காகக் கொண்ட சிறந்த விவசாய நடைமுறைகள் (Good Agricultural Practices/GAP) பின்பற்றப்பட வேண்டும்.

 

மரங்களுக்கு இடையில் சரியான இடைவெளியைப் பேணுதல்சிறந்த சூரிய ஒளிவிளைச்சல் தராத மரங்களை அகற்றி புதிய மரங்களை நடுதல்ஊடுபயிர்ச் செய்கைமண் பாதுகாப்புசிறந்த பீடை முகாமைத்துவம்சீரான போசணை மற்றும் திறனான நீர் விநியோகம் ஆகியன இங்கு முக்கிய காரணிகளாகக் காணப்படுகின்றன.

 

இலங்கையில் முறையாகப் பராமரிக்கப்படும்ஆரோக்கியமான தென்னை மரமானதுவருடாந்தம் சராசரியாக 100 முதல் 120 தேங்காய்கள் வரை அறுவடை தரும்அத்தகைய அறுவடையை உற்பத்தி செய்யஒரு தென்னை மரத்திற்கு தினமும் சுமார் 60 லீற்றர் நீர் அவசியமாகிறதுமரத்தின் போசணை காலப்போக்கில் படிப்படியாகக் குறைந்துமண்ணின் வளம் படிப்படியாகக் குறைவதால்மரத்திற்குத் தேவையான போசணையை உரமாக வெளியிலிருந்து வழங்க வேண்டும்ஆயினும்ஆராய்ச்சிகளின் படிஇலங்கையில் தென்னை செய்கையாளர்களில் 30% ஆனோர் மாத்திரமே உரத்தையும், 10% எனும் சிறிய அளவிலானோரே நீரையும் வழங்குகின்றனர்இதன் காரணமாகஅன்றாட நீர் மற்றும் உரம் கிடைக்காத ஒரு தென்னை மரம் வருடாந்தம் 40-60 தேங்காய்களை மாத்திரம் உற்பத்தி செய்கிறது.

DIMO நிறுவனத்தின் விவசாயப் பிரிவான DIMO Agribusinesses, உள்ளூர் விவசாயத் தொழில் துறையில் நவீனத்துவத்தைப் புகுத்திமுழு விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சேவைகளை செயற்படுத்தி வருகிறதுதென்னங் கன்றுகளை நடுவது முதல் அறுவடைச் செயன்முறை வரையான அனைத்து செயற்பாடுகளிலும்தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டுஅதன் தயாரிப்புகள் முழு விவசாயத் துறைக்கும் பல்வேறு தீர்வுகளை வழங்குகின்றது.

 

உயர் தரத்திலான தேங்காய் அறுவடையைப் பெறுவதற்கான முதல் படிஉயர் தர தென்னங் கன்றுகளை நடுவதாகும்உயர்தர தென்னங் கன்றுகளின் பதிவுசெய்யப்பட்ட விநியோகஸ்தர் எனும் வகையில் DIMO Agribusinesses நிறுவனமானதுதமது விவசாய தொழில்நுட்ப பூங்காக்களில் சரியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும்உயர்தர தென்னங் கன்றுகளைதென்னந் தோட்டச் செய்கையாளர்களுக்கு விநியோகிக்கிறது.

 

DIMO உர வர்த்தகநாமத்தின் கீழ், DIMO Agribusinesses அதன் முக்கிய கலவைகளான YPM-D, YPM-W, APM-D, APM-W, APM-TSP ஆகியவற்றுக்கு மேலதிகமாககுரோமேக்ஸ் வர்த்தகநாமத்தின் கீழ்உலகப் புகழ்பெற்ற நைட்ரோபொஸ்கா கூட்டு உர கலவையைக் கொண்டதெங்குச் செய்கைக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட விசேட உரங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

அது மாத்திரமன்றி, DIMO Agribusinesses அதன் ஆராய்ச்சிக் கூடங்களில் மண்ணின் சரியான தரத்தை பராமரிப்பதற்காகமண் பகுப்பாய்வு மற்றும் சோதனைகளை மேற்கொள்கின்றதுஅதன் ஆலோசனை சேவைகள் மூலம் மண்ணுக்கு பொருத்தமான உரங்களை பரிந்துரைப்பதோடுதெங்கு விவசாயிகளுக்கு அது தொடர்பான தொழில்நுட்ப அறிவை தொடர்ச்சியாக வழங்கிமுறையான செய்கை முறைகள் குறித்தான தெளிவூட்டல்கள் மற்றும் சரியான உரங்களின் பயன்பாடுகள் தொடர்பில் அவர்களை தெளிவூட்டுகிறது.

பாரம்பரிய முறைகள் மூலமான நீர் விநியோகத்தில் உள்ள சிரமங்கள் காரணமாகவிவசாயிகள் பரிந்துரைக்கப்பட்டபடி பயிர்களுக்கு நீர் வழங்குவதை மேற்கொள்வதில்லைஉலகப் புகழ்பெற்ற Rivulis நிறுவனத்துடன் இணைந்து நாட்டில் நுண் நீர்ப்பாசன தொழில்நுட்பங்களை ஊக்குவித்து வரும் DIMO Agribusinesses, இந்த பிரச்சினைக்கு ஒரு சிறந்த தீர்வாகதெங்குச் செய்கைக்கு மிகவும் பொருத்தமான முழுமையான மற்றும் அரைத் தன்னியக்க துணை மேற்பரப்பு சொட்டு நீர்ப்பாசன திட்டங்களை நாடு முழுவதும் செயற்படுத்தி வருகிறதுஇதன் மூலம் தென்னந் தோட்டங்களுக்கு திறம்பட நீர் வழங்கப்படுவதோடுஅத்தொகுதி மூலமாகவே விநியோகிக்கக் கூடிய வகையிலானதேங்காய்ச் செய்கைக்கு மிகவும் பொருத்தமான நீரில் கரையக்கூடிய உரக் கலவைகளையும் (Fertigation Fertilizer) நிறுவனம் உற்பத்தி செய்து வழங்குகின்றது. DIMO Agribusinesses உங்கள் நிலத்திற்கு மிகவும் பொருத்தமான நீர்த் தொகுதி கட்டமைப்பைத் தேர்ந்தெடுத்தல்பயன்படுத்தப்பட வேண்டிய உரத்தின் அளவுதேவையான உர வழங்கல் ஓட்ட விகிதம்தொட்டியின் அளவு மற்றும் பைபாஸ் முறை தேவையா என்பது பற்றிய ஆலோசனை சேவைகளையும் வழங்குவதோடுநுண் நீர் விநியோக தொகுதிககளை வடிவமைத்தல்நிறுவுதல் போன்றவற்றை மேற்கொள்வதோடு மாத்திரமல்லாமல்விற்பனைக்குப் பிந்தைய சேவைகளையும் வழங்குகின்றனஅதற்கமையபொதுவான பராமரிப்புதொழில்நுட்ப சிக்கல்களை சரிசெய்தல்தொகுதியின் மேம்பாடுகள் போன்ற எந்தவொரு பணியையும் மேற்கொள்வதிலும் நிறுவனம் அர்ப்பணிப்புடன் உள்ளது.

பல தெங்கு விவசாயிகள் நுண் நீர்ப்பாசன முறையைத் தெரிவு செய்யாமைக்கு அதன் ஆரம்ப செலவு முக்கிய காரணமாக இருந்த போதிலும்அது தெங்குச் செய்கையின் உற்பத்தித்திறனை அதிகரிக்க பங்களிப்புச் செய்துஅதிக வருமானத்தை வழங்குவதால், DIMO Agribusinesses சர்வோதய மேம்பாட்டு வங்கியுடன் இணைந்து கவர்ச்சிகரமான கடன் வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading