Features

“தை பிறந்தால் யாருக்கு வழி பிறக்கும்”: தை பொங்கல் ராசி பலன் 2024

தை முதல் நாளில் சூரியன் மகர ராசியில் பயணத்தை தொடங்குகிறார்.

இந்த நாளில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களில் யாருக்கெல்லாம் அஷ்ட லட்சுமி யோகம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு தை பிறந்ததும் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பதவியில் உயர்வு, சம்பள உயர்வு தேடி வரும்.மகாலட்சுமியின் அருளால் பொருளாதார நிலை உயரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு தை மாதம் முதல் நீங்கள் ஆலய தரிசனத்திற்காக ஆன்மீக பயணம் செல்வீர்கள். கடன் பிரச்சினைகள் நீங்கி மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு செய்யும் செயல்களில் கவனமும் நிதானமும் தேவைப்படும். நினைத்த காரியம் நிறைவேற நீங்கள் தை பொங்கல் நாள் முதல் தினசரி சூரிய தரிசனம் செய்து வணங்கவும். ஏழைகளுக்கு ஞாயிறுக்கிழமைகளில் தயிர் சாதம் தானமாக கொடுக்க நன்மைகள் நடைபெறும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு தை திருநாள் முதல் எதிர்பாராத மாற்றங்கள் நடைபெறப்போகிறது.

உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன் இணைந்து பயணம் செய்யப்போவதால் திடீர் மாற்றங்கள் ஏற்படும். மூன்று கிரகங்களின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. ஏழைகளுக்கு உதவினால் பொருளாதார நிலை உயரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். மகாலட்சுமி யோகம் தேடி வரப்போகிறது. கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கப்போகிறது.

தீராத பிரச்சினைகளை தீர்த்து வைக்கப்போகிறார் சூரிய பகவான்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு மன குழப்பம் நீங்கி, உங்கள் வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். துளசிக்கு தினசரி தண்ணீர் ஊற்றி அகல் விளக்கு ஏற்றி வழிபட கடன், நோய் பிரச்சினை நீங்கும்.

துலாம்

தை மாதம் முதல் சூரியனும் சுக்கிரனும் இணைந்து உங்களுக்கு ஆடம்பர பொருள் சேர்க்கையை ஏற்படுத்துவார்கள்.

வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திடீர் யோகமும் பண வரவும் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களின் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நீண்ட நாட்களாக நல்ல வேலைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களுக்கு முன்பு கடனாக கொடுத்த பணம் எல்லாம் திரும்ப வரும்.

கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த பொங்கல் முதல் மன கலக்கம் நீங்கப்போகிறது. மாத பிற்பகுதியில் புதன், செவ்வாய் இணையப்போகின்றனர்.

நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்க எள், வெல்லம் சேர்த்த எள் உருண்டை செய்து தானமாய் கொடுத்து வர கடன் பிரச்சினை நீங்கும் நிம்மதி அதிகரிக்கும்.

கும்பம்

உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12வது வீட்டில் சூரியன் பயணம் செய்கிறார்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். உங்களுக்கு தை மாதம் முதல் பண வரவு வருவதற்கான வழி பிறக்கப்போகிறது. உங்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போகிறது. உங்கள் கனவுகள் நனவாகப்போகிறது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு தொழிலில் லாபம் அதிகரிக்கும். எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதை எளிதில் சமாளிக்கக் கூடிய மன தைரியத்தை சூரிய பகவான் உங்களுக்கு கொடுக்கப்போகிறார்.

ஞாயிறுக்கிழமை காலையில் சூரிய நமஸ்காரம் செய்து கோதுமையால் செய்த சப்பாத்தியை பசுவிற்கு தானமாக கொடுக்க பண வருமானம் அதிகரிக்கும். உங்களின் கடன் பிரச்சினைகள் நீங்கும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading