Local

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் ஒப்பந்தம் கைச்சாத்து

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தமானது இன்று (30) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் வைத்து கையெழுத்திடப்பட்டுள்ளது.

அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகிர்த்தி, சம்பள நிர்ணய சபையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, ஜனாதிபதியினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 1,750 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்போது அடிப்படைச் சம்பளத்தை 1,350 ரூபாவிலிருந்து 1,550 ரூபாவாக 200 ரூபாய் அதிகரிப்பதற்கும், வருகைக்கான கொடுப்பனவாக 200 ரூபாவினை அரசாங்கம் செலுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது.

அதற்கமைய, இச்சம்பளத்திற்காக வரவு செலவுத் திட்டத்தில் 5,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading