World

தோல்வியடைந்தால் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவேன்: ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி காங்கிரஸின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினால், அக்கட்சியின் சட்டமூலங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு ஜனாதிபதிக்குள்ள வீட்டோ அதிகாரத்தைத் தீவிரமாகப் பயன்படுத்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனது நிர்வாகத்தில் பணியாற்றும் அதிகாரிகளைப் பாதுகாப்பதற்காகப் பரந்த அளவிலான முன்கூட்டிய ஜனாதிபதி மன்னிப்புகளை வழங்கவும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர்,

“நான் ‘மிஸ்டர் வீட்டோ’வாக மாறுவேன் என நினைக்கிறேன். அவர்கள் அனைத்தையும் சீரழிக்க நான் அனுமதிக்கப் போவதில்லை.

தேர்தலில் தோல்வியடைந்தால் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவேன்: ட்ரம்ப் எச்சரிக்கை! | Will Use My Veto Power Lose Election Trump Warns

நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன். ஆனால், அவ்வாறு நடைபெறாவிட்டால், அனைத்தையும் வீட்டோ செய்வேன்.

தொடர்ந்து வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவேன். இறுதியில் அவர்கள் என்னுடன் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள்.

அப்போது சில உடன்பாடுகளையும் எட்ட முடியும். ஜனநாயகக் கட்சியினர் முன்வைக்கும் சட்டமூலங்கள் மீது சில மாதங்கள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்திய பின்னர், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading