Cinema

நடிகர் ரஜினிகாந்த் தமிழில் எழுத மாட்டாராம் மகள் பரபரப்பு தகவல்!

ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா மேடை ஒன்றில் தனது தந்தைக்கு தமிழில் எழுத தெரியாது என்று கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற நடிகராக விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் Hoote என்ற புதிய செயலியை தொடங்கி வைத்துள்ளார்.

இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நிகழ்ந்தது. அப்போது பேசிய அவர், எனது தந்தை ரஜினிகாந்துக்கு தமிழ் எழுத வராது.

ஆனால் நன்றாக படிக்க தெரியும். சமூகவலைதளங்களில் பதிவிடவிரும்புவதை குரல் வழியாக பதிவு செய்து எனக்கு அனுப்புவார். அப்போது தான் இந்த செயலியை உருவாக்க வேண்டும் என்கிற யோசனை தோன்றியது.

அப்பாவுக்கு தமிழ் எழுத வராது என்பதை அவரிடம் கலந்து பேசிவிட்டு தான் இங்கு பேசுகிறேன். அவருக்கு தமிழ் மொழி எழுத வராது என்பதால் அவர் மீது தமிழ்நாடு மக்கள் வைத்துள்ள அன்பு குறையப்போவதில்லை என்று சவுந்தர்யா நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
இதையடுத்து இவர் நிகழ்ச்சியில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading