CinemaLocal

நடிகர் விஜய்யுடன் அதிக நேரத்தை செலவிடும் இலங்கைப் பெண்!

இலங்கையைச் சேர்ந்த பிக்பாஸ் ஜனனி லியோ படப்பிடிப்பில் நடிகர் விஜய்யுடன் அதிக நேரம் செலவிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியொன்றில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துக் கொண்டனர். இதில் இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் பங்குபற்றியிருந்தார்.

இவர் முன்னைய போட்டியாளரான லாஸ்லியாவைப் போல தனது கொஞ்சலான பேச்சால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் இவர் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் அவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்து விட்டது. அதன் அஸ்த்திவாராமாக மொபைல் விளம்பரத்தில் நடித்து தனது நடிப்பிற்கு ஆரம்ப புள்ளி வைத்தார்.

விஜய்யுடன் அதிக நேரம்

அவர் அண்மையில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் ‘லியோ படத்தில் விஜய்யின் மகளாக நடிப்பதாக உளறி இருந்தார். இந்நிலையில், லியோ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்கிறது.

அதில் பெரிய திரைப்பிரபலங்களுடன் முதன்முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ஜனனியும் நடித்து வருகின்றார்.

லியோ திரைப்பட படப்பிடிப்பின் போது ஜனனி விஜய்யுடன் அதிக நேரம் செலவிட்டு நடிக்கும் கதாப்பாத்திரம் தான் கிடைத்திருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

படப்பிடிப்பு தற்போது முடிவடைந்த நிலையில் முதல் திரைப்படத்திலேயே ஜனனிக்கு இப்படியொரு வாய்ப்பா என்று பலரும் வாயடைத்துப் போயிருக்கிறார். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading