நடுவானில் விமானத்தின் ஜன்னல் ஃப்ரேம் விலகியதால் பெரும் பரபரப்பு !
இந்தியாவில் ஸ்பைஸ்ஜெட் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது விமானத்தின் ஜன்னல் ஃப்ரேம் விலகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவாவில் இருந்து புனேவுக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஜன்னல் சட்டகம் நடுவானில் விலகியது.
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ‘எஸ்ஜி1080’ விமானம் கோவாவில் இருந்து புனே நகருக்கு பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) அன்று புறப்பட்டது.

அதோடு விமான பயண பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார். இது வைரலான நிலையில் விமானம் புனேவில் தரையிறங்கியதும் மீண்டும் அதே இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

இதை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அது தொடர்பாக விளக்கம் தந்துள்ளது.
இதனால் பயணிகள் பாதுகாப்பில் எந்தவித பாதிப்பும் இல்லை என ஸ்பைஸ்ஜெட் கூறியுள்ளது. மேலும், விமானத்தில் கேபின் அழுத்தம் இயல்பாகவே இருந்தது என்றும் விமானம் நிறுவனம் தெரிவித்துள்ளது

You must be logged in to post a comment.