நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி! பிரதமர் இராஜினாமா!!
பல வாரங்களாக ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து மங்கோலியப் பிரதமர் லவ்சன்னம்ஸ்ரைன் ஓயுன்-எர்டீன் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
மங்கோலியாவில் பிரதமர் லவ்சன்னம்ஸ்ரைன் தலைமையிலான மங்கோலிய மக்கள் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இவரது மகன் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது பெரும் விவாத பொருளான நிலையில் பிரதமர் பதவி விலக கோரி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் பிரதமர் லவ்சன்னம்ஸ்ரைன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தார்.
தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் போதிய பெரும்பான்மையை அவர் பெறவில்லை. எனவே தனது பதவியை லவ்சன்னம்ஸ்ரைன் ராஜினாமா செய்துள்ளார்.

You must be logged in to post a comment.