Local

நவம்பர் 30 வரை ஊரடங்கு பட்டாசு விற்பனைக்குத் தடை!

ராஜஸ்தானில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்கு அம்மாநில அரசு திடீர் தடை விதித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வு நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ராஜஸ்தான் மாநில அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் நவ. 16ம் தேதி வரை மூடப்படும். அதே நேரத்தில் நீச்சல் குளம், சினிமா ஹால், தியேட்டர், மல்டிபிளக்ஸ், என்டர்டெயின்மென்ட் பார்க் போன்றவை முந்தைய உத்தரவின்படி நவ. 30ம் திகதி வரை மூடப்படும். தொற்றுநோயின் இந்த சவாலான நேரத்தில், பொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பது அரசுக்கு மிக முக்கியமான என்பதால், தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது.

முன்னதாக முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில், ‘அன்லாக் -6’ வழிகாட்டுதல்கள் குறித்து விவாதித்தார். கூட்டத்தில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் பொது மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க பட்டாசுகள் விற்பனை தடை செய்யப்படுகிறது. பட்டாசுகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக, கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் இதயம் மற்றும் சுவாச நோயாளிகளும் பிரச்னைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. இத்தகைய சூழ்நிலையில் மக்கள் தீபாவளியன்று (நவ. 14) பட்டாசுகள் வெடிப்பபை தவிர்க்க வேண்டும். பட்டாசுகளை விற்பனை செய்வதற்கான தற்காலிக உரிமத்தை தடை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமணங்கள் மற்றும் பிற விழாக்களில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

மாநிலத்தில் புதியதாக 2,000 மருத்துவர்களின் ஆட்சேர்ப்பு பணிகள் விரைவில் முடிக்கப்படும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் நவ. 16ம் தேதிக்கு பின்னர் திறக்கப்படும். திருமண விழாவில் விருந்தினர்களின் அதிகபட்ச வரம்பு 100 ஆக இருக்க வேண்டும். கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நடைமுறைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading