Local

நாடு முழுவதும் தடைப்பட்ட மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது!

நாடு முழுவதும் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர் துமிந்த திஷாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் இன்று முற்பகல் முதல் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளமையினால் பொது மக்களின் அன்றாட வேலைகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளது.

இந்த மின் தடைக்கு மின்சார விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்பே காரணமாக இருக்கலாம் என்று மின்சார சபை முன்னர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தற்போது மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கலை சீர்செய்ய இன்னும் மூன்று மணித்தியாலங்கள் தேவை என்று மின்சார சபையின் முகாமையாளர் அறிவித்திருந்த நிலையில்,சுமார் ஆறு மணித்தியாலயங்களின் பின்னர் மின் வழமைக்கு திரும்பியுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading