EntertainmentWorld

நான்கு அழகிகளை ஒரே மேடையில் திருமணம் செய்த நபர்!

குவைத் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒரே நாளில் ஒரே மேடையில் 4 பெண்களை திருமணம் செய்துள்ளதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தைப் பகிர்ந்து வரும் பலரும் அந்த நபர் குறித்துப் பொறாமைப்படுவதாக கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

இணையவாசிகள், சிலர் அவர் முன்னாள் மனைவியின் முகத்தில் கரியைப் பூசுவதற்காக இப்படி ஒரே மேடையில் 4 பெண்களை திருமணம் செய்துள்ளதாக நம்புகின்றனர்.

திருமண ஆடை அணிந்திருக்கும் நபர் ஒருவரும் அவரை சுற்றி மணக்கோலத்தில் 4 பெண்களும் அந்த புகைப்படத்தில் இடம் பெற்றிருந்தனர்.

“பிரிந்து போன மனைவி
உன்னோடு ஒரு பெண் கூட வாழ மாட்டாள் என்று சொன்னார்.
எனவே அந்த இளைஞர் ஒரே மேடையில் நான்கு பெண்களைத் திருமணம் செய்தார்.” என ஒருவர் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இது குறித்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

அரபு நாடுகளில் பலதாரமணம் என்பது பரவலான ஒன்றாக இருப்பதனால் இதனை மக்கள் எளிதாக நம்புகின்றனர். ஆனால் இது உண்மையில் ஒரு திருமணத்தின் புகைப்படம் இல்லை.

இந்த புகைப்படமானது ஒரு மாடலிங் போட்டோ ஷூட்காக எடுக்கப்பட்டதாக சில பதிவுகள் கிடைக்கிறது என ஸ்கூப் எம்பயர் தளம் கூறுகிறது.

ஆனால் இரண்டு விதமான பதிவுகளும் உண்மைத் தன்மையற்றதாக இருக்கிறது எனவும் ஸ்கூப் எம்பயர் கூறியுள்ளது. எனினும் நெட்டிசன்களுக்கு இது முக்கிய விவகாரமாக தெரிந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading