Entertainment

நாயை காப்பாற்ற திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை!

பொதுவாக திருமணம் என்றாலே பல வேடிக்கையான சம்பவங்கள் நடப்பது வழக்கமான ஒன்று . அந்தவரிசையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சாரம் இல்லாத காரணத்தால் மணப்பெண் மாறிய சம்பவம் இணையத்தில் வைரலானது.

அதே போல் அந்தரத்தில் திருமணம் , கடலுக்கடியில் திருமணம் எனப் பல செய்திகள் இணையத்தில் வைரலான நிலையில் , திருமணத்திற்குப் போகாமல் நீரில் சிக்கிய நாயினை காப்பாற்ற மணமகன் செய்த செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் , ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது , அதில் நாய் ஒன்று சிக்கித் தவிக்கிறது. அதனைக் காப்பாற்ற யாரும் முன்வராத நிலையில் திருமண நிகழ்வில் பங்கேற்க வேண்டிய நபர் ஒருவர் அந்த பகுதி வழியாகச் செல்லும் போது அதனைக் காண்கிறார்.

திருமணத்திற்குச் செல்லாமல் , தனது கோட்டை கழட்டி வைத்துவிட்டு , ஆற்றில் தத்தளித்த நாயினை தனது கையினை நீட்டியபடி மேலே தூக்குகிறார்.

இதனால் அந்த நாய் பத்திரமாக மீட்கப்படுகிறது. இந்த நிகழ்வானது தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நெகிழ்ச்சி செயலை செய்த அந்த மாப்பிள்ளையினை சார் உங்க மனசு தங்கம் என இணையவாசிகள் புகழ்ந்து வருகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading