Local

நித்திரையில் இருந்த இளைஞரின் கழுத்தில் கத்தியால் குத்திக் கொலை!

இனந்தெரியாத நபர் ஒருவர் வீட்டினுள் புகுந்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞரின் கழுத்தில் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் இன்று (07) பிற்பகல் 2.20 மணியளவில் களுத்துறை பலதொட்ட வீதி, தேக்கவத்தை பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தொகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான 27 வயதுடைய இளைஞன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுருத்த தனஞ்சய டி சில்வா எனப்படும் சந்துன் என்று அழைக்கப்படும் முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading