Jobs

நிலைபேறான தலைமைத்துவத்திற்காக கௌரவிக்கப்பட்ட ஹேமாஸ்

 

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (Hemas Holdings PLC) நிறுவனமானது ‘Best Corporate Citizen Sustainability (BCCS) Awards 2025’ (சிறந்த நிறுவன ரீதியான பிரஜைக்கான நிலைபேறான விருதுகள் 2025) விருது விழாவில் இலங்கையின் முன்னணி நிறுவன பிரஜைகளில் ஒன்றாக கௌரவிக்கப்பட்டுள்ளதுஇதுநெறிமுறைசார்ந்த ஆளுகைநிலைபேறான செயல் திறன் மற்றும் தேசிய ரீதியான பெறுமதி உருவாக்கம் ஆகியவற்றில் வலுவான வரலாற்றைக் கொண்ட ஒரு நோக்கத்தால் வழிநடத்தப்படும் ஒரு நிறுவனம் எனும் வகையில் இக்குழுமம் கொண்டுள்ள நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

 

இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் BCCS விருதுகள்சூழல் தொடர்பான நிர்வாகம்சமூகப் பொறுப்புபங்குதாரருக்கான பெறுமதி உருவாக்கம் மற்றும் தேசிய அபிவிருத்தி ஆகியவற்றில் தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் நிறுவனங்களை கௌரவிக்கின்றனபத்து சிறந்த நிறுவன ரீதியான பிரஜைகளில் இடம்பிடித்த ஹேமாஸ் குழுமம்பல்வகைத் துறை நிறுவன பிரிவிற்கான விருதை வென்றதோடுஒட்டுமொத்த 3ஆம் இடத்தையும் பிடித்ததுஅத்துடன்சிறந்த விநியோகஸ்தர் உறவுகளுக்கான விருதையும்அச்சுறுத்தலுக்குள்ளான உள்ளூர் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான அதன் நிலைபேறான முயற்சிகளுக்காக மெரிட் திட்ட விருதையும் (Merit Project Award) வென்றதுஇலங்கையிலுள்ள முதல் மூன்று நிறுவனங்களில் ஒன்றாக இங்கு அங்கீகரிக்கப்பட்டமையானதுகுறித்த துறைகள் முழுவதும் ஹேமாஸ் நிறுவனத்தின் சீரான தலைமைத்துவத்தையும்அளவிடக்கூடிய தாக்கத்தை வழங்கக்கூடிய அதன் திறனையும் பிரதிபலிக்கிறது.

 

இந்தக் கௌரவம் குறித்து கருத்துத் தெரிவித்த மக்கள் மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் பிரதம அதிகாரி ரவி ஜயசேகர, “Best Corporate Citizen Sustainability Awards 2025 விருது விழாவில் கிடைத்த கௌரவமானதுநோக்கமும் செயல் திறனும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளவை எனும் எமது நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறதுஹேமாஸ் ஆகிய நாம்நீடித்த பெறுமானத்தை உருவாக்குவதற்கும்சமூகங்களை வலுவூட்டுவதற்கும்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும்தேசிய முன்னுரிமைகளை ஆதரிப்பதற்கும் நாம் உறுதிபூண்டுள்ளோம்இந்த விருதானது எமது வணிகப் பிரிவுகளின் அளவிடக்கூடிய பெறுபேறுகளை அங்கீகரிக்கிறதுஅத்துடன்இலங்கையின் பெருநிறுவனத் துறையில் நிலைபேறான விடயங்களில் ஒரு தலைவர் எனும் ஹேமாஸ் நிறுவனத்தின் நிலையை உறுதிப்படுத்துகிறது.” என்றார்.

 

இது குறித்து மேலும் விபரித்த குழுமத்தின் நிலைபேறான மற்றும் பெருநிறுவன தொடர்பாடல் பிரிவின் தலைவர் இஷானி ரணசிங்க, “இந்த கௌரவமானதுவலுவான ஆளுகைதெளிவான முன்னுரிமைகள் மற்றும் அளவிடக்கூடிய பெறுபேறுகளை மையமாகக் கொண்ட நிலைபேறான விடயங்களில் எமது ஒழுக்க நெறி கொண்ட மற்றும் மூலோபாய அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறதுசூழல் தொகுதியை மீளக்கட்டியமைத்தல்பிளாஸ்டிக் மீள்சுழற்சிஅத்தியாவசிய சேவைகளுக்கான சமமான அணுகல் போன்ற அம்சங்களில் முறையான மாற்றத்தை ஏற்படுத்துவதில் நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்துகின்றோம்எமது நிலைபேறான செயல் திறனை நாம் தொடர்ந்து வலுப்படுத்துவதால்இலங்கையின் பொறுப்பான பெருநிறுவன தலைமைத்துவம் தொடர்பான உயர் தரங்களை அமைப்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.” என்றார்.

 

நம்பகமானவெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய நிலைபேறான தலைமைத்துவம் குறித்து பங்குதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ள இந்நேரத்தில் ஹேமாஸ் கௌரவிக்கப்பட்டுள்ளதுவர்த்தக சம்மேளனத்தின் இறுக்கமான மதிப்பீட்டின் மூலம் மதிப்பிடப்பட்ட ஆளுகைசூழல் தொடர்பான பொறுப்புசமூகத் தாக்கம் மற்றும் நெறிமுறை ரீதியான நடத்தை ஆகியவற்றில் குழுமத்தின் செயல் திறன்மக்களின் வாழ்வை வளப்படுத்துதல்தேசிய அபிவிருத்தியை ஆதரித்தல் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக பூமியை பாதுகாத்தல் ஆகியவற்றில் ஹேமாஸ் நிறுவனம் கொண்டுள்ள நீண்ட கால அர்ப்பணிப்பை இது வலுப்படுத்துகிறது.

 

Hemas Holdings PLC பற்றி

1948 இல் நிறுவப்பட்ட ஹேமாஸ் நிறுவனம்குடும்பங்கள் சிறந்த எதிர்காலத்தை அடைய ஊக்குவிக்கும ஒரு எளிய நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதுஇந்த நம்பிக்கையால் வழிநடத்தப்பட்டு, 75 ஆண்டுகளாக ஹேமாஸ்நுகர்வோர் வர்த்தகநாமங்கள்சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளில் புத்தாக்கமான தீர்வுகளின் மூலம் வாழ்க்கையை வலுவூட்டி வருகிறதுஇலங்கையின் சமூகப் பொருளாதார கட்டமைப்பில் பின்னிப் பிணைந்திருக்கும் ஹேமாஸ் நிறுவனம்பங்களாதேஷில் செயற்பாடுகளை ஆரம்பித்ததன் மூலம் பிராந்திய ரீதியாகவும் விரிவடைந்துள்ளதுஎமது முன்னோக்கிய பயணத்தில்அனைத்துப் பங்குதாரர்களுக்கும் சாதகமான தாக்கத்தை உருவாக்கபல்வேறு வகையான மற்றும் ஆர்வமுள்ள அணிகளுடன் தொடர்ச்சியாக முதலீடு செய்துஅர்த்தமுள்ள சலுகைகளை உருவாக்கிநம்பகமான கூட்டாண்மைகளைப் பேணுவதோடுஅனைவரையும் உள்ளடக்கிய உலகத்தை ஏற்படுத்துவோம்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading