நீரிழிவு நோய்..வரமா! சாபமா!!
நீரிழிவு (Diabeழிவு என்பது நமது முறையற்ற பழக்க வழக்கங்களுக்காக நமக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையா? அல்லது, நம்மை நாமே திருத்திக் கொண்டு நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழக் கொடுக்கப்பட்ட ஒரு வரமா?
நீரிழிவு என்பது ஏதோ ஒரு சிலருக்கு மட்டும் வரும் சாதாரணப் பிரச்சினையல்ல, அது உலகையே ஆட்டிப்படைக்கும் ஒரு Silent Epidemic என்று கூட சொல்லலாம்.
International Diabetes Federation ன் (IDF) தரவுகளின்படி, உலகளவில் சுமார் 58.9 கோடி பெரியவர்கள் (10 பேரில் ஒருவர்) நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) மதிப்பீட்டின்படி, இந்தத் தொகை 830 மில்லியனை எட்டக்கூடும். இதில் சோகம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்களில் பாதிப் பேருக்கு தங்களுக்கு இந்த நோய் இருப்பது கூடத் தெரியாது!
2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் நீரிழிவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 853 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் நீரிழிவு நோய்க்கான மருத்துவச் சிகிச்சைகளுக்காக மட்டும் ஆண்டிற்கு 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை செலவிடப்படுகிறது.
இலங்கையில் இன்று நீரிழிவு நோயின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. புள்ளிவிவரங்களின்படி, 10 பேரில் ஒருவருக்கு நீரிழிவு உருவாகி, ஒட்டுமொத்த சனத்தொகையில் சுமார் 4.3 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்பெல்லாம் 50, 60 வயதைக் கடந்தவர்களை மட்டுமே தாக்கிய இந்த நிலை, இன்று துரதிர்ஷ்டவசமாக 20, 30 வயதுடைய இளையோரையும் அதிகளவில் பாதித்து வருகிறது.
இது நம் எதிர்காலச் சமுதாயத்திற்கே ஒரு பெரும் அச்சுறுத்தலாகும்.
முதலில் நாம் நீரிழிவு என்றால் என்ன என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
Type 2 Diabetes என்பது பரம்பரையாகத் தொற்றிவரும் ஒரு நோயோ அல்லது குணப்படுத்த முடியாத கொடிய வியாதியோ அல்ல.
இது ஒரு “Metabolic Syndrome” (வளர்சிதை மாற்றக் குறைபாடு) மட்டுமே.
நமது தவறான உணவுப் பழக்கம், சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை மற்றும் மனஅழுத்தம் (Stress) ஆகியவற்றால் நாமே தேடிக்கொண்ட ஒரு உடலியல் சமநிலையின்மையே இதுவாகும்.
குறிப்பாக, நாம் உண்ணும் உணவைச் சரியாகப் புரிந்து கொள்ளாததே இதற்குக் காரணம்.
முன்னரெல்லாம் நீரிழிவு என்றால் குணப்படுத்த முடியாத பரம்பரை நோய், என்றும் வாழ்நாள் முழுவதுமான மாத்திரைகள் ஊசிகளிலேயே தங்கி இருக்க நேரிடும் என கூறப்பட்டது.
ஆனால் உண்மை என்னவெனில் நீரிழிவு என்பது மாற்றி அமைக்கக்கூடிய (Reversible) metabolic syndrome என்றும் இதற்கு காரணமே சுத்திகரிக்கப்பட்ட( ultra refined)மாவுச்சத்து, உடற்பயிற்சின்மை, மனஅழுத்தம் போன்றவை என தற்பொழுது கூறப்படுகிறது.
நம் உடலில் இன்சுலின் எதிர்ப்புத் திறன் எவ்வாறு ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
நமது Digestive System ஒரு சுத்திகரிப்புத் தொழிற்சாலை போன்றது.
நாம் உண்ணும் உணவு எரிபொருளாக (Glucose) மாற்றப்பட்டு இரத்தத்தில் கலக்கிறது. ஆனால், நாம் எந்த வகையான எரிபொருளைக் கொடுக்கிறோம் என்பதில் தான் ஆபத்தே ஒளிந்துள்ளது.
அதற்கு முதலில் நமது சமையலறையில் இருக்கும் மூன்று கொடிய எதிரிகள் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
1. பட்டை தீட்டப்பட்ட கோதுமை மா / வெள்ளை அரிசி (Refined Carbs)
2. வெள்ளைச் சீனி (Refined Sugar)
3. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் (Refined / Hydrogenated Oils)
வெள்ளை அரிசி, மைதா, சீனி மற்றும் பாக்கெட் உணவுகளைத் தயாரிக்கும் போது, தானியங்களில் உள்ள தவிடு (Bran) மற்றும் முளைக்கரு (Germ) ஆகியவை நீக்கப்பட்டு விடுகின்றன.
இதனால் அவற்றில் உள்ள அத்தியாவசிய நார்ச்சத்தும் (Fiber) நுண்ணூட்டச்சத்துக்களும் முற்றிலுமாக அழிந்துவிடுகின்றன.
நார்ச்சத்தே இல்லாத இந்த உணவுகள் வயிற்றுக்குள் சென்றவுடன், சமிபாட்டு மண்டலத்திற்கு எந்த வேலையும் வைப்பதில்லை.
அவை 15 முதல் 30 நிமிடங்களுக்குள் எளிதாகக் கரைந்து, ஒரே நேரத்தில் ஒரு பெரும் வெள்ளம் போல இரத்தத்தில் குளுக்கோஸாகக் கலக்கின்றன.
நாம் காலையில் பரோட்டா அல்லது வெள்ளைச் சோறு, மதியம் பிரியாணி, மாலையில் பிஸ்கட்-டீ, இரவில் தோசை எனத் தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்தையே சாப்பிடும்போது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு எப்போதும் ஆபத்தான உச்சியிலேயே (Chronic Spikes) நீடிக்கிறது.
இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும் போது, அது இரத்த நாளங்களையும் நரம்புகளையும் சேதப்படுத்தும்.
எனவே, உடல் உடனடியாகக் கணையத்தில் (Pancreas) உள்ள பீட்டா செல்களைத் (Beta Cells) தூண்டி, மிக அதிகளவிலான இன்சுலின் (Insulin) ஹார்மோனைச் சுரக்கச் செய்கிறது.
இன்சுலின் என்பது ஒரு “திறவுகோல்” (Key) போன்றது. இரத்தத்தில் மிதக்கும் குளுக்கோஸ் தானாகச் செல்களுக்குள் நுழைந்துவிட முடியாது.
இன்சுலின் சென்று செல்களின் கதவைத் திறந்தால் மட்டுமே, குளுக்கோஸ் உள்ளே சென்று Energyயாக மாற முடியும்.
Ultra-processed உணவுகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க, Pancreas சாதாரண அளவை விட 5 முதல் 10 மடங்கு வரை அதிக இன்சுலினைச் சுரக்கிறது.
ஒரு குட்டிச் சம்பவம் மூலம் இதைப் புரிந்துகொள்ளலாம்.
உங்கள் வீட்டு வாசலில் ஒரு நிமிடம் ஒருவன் வந்து மணியடித்தால் (Doorbell), நீங்கள் கதவைத் திறந்து வரவேற்பீர்கள்.
அதுவே ஒரு நாளைக்கு 24 மணி நேரமும், நூற்றுக்கணக்கானவர்கள் வந்து உங்கள் வீட்டு வாசலில் இடைவிடாது பெல் அடித்துக் கொண்டே இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
சத்தம் தாங்க முடியாமல் கோபமடைந்து, காதுகளில் பஞ்சை வைத்துக் கொண்டு, வீட்டின் பிரதான கதவைப் பூட்டி உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொள்வீர்கள் அல்லவா?
நம் உடலின் செல்களும் (தசைகள், கல்லீரல் செல்கள்) இதைத்தான் செய்கின்றன. இரத்தத்தில் இன்சுலின் என்னும் திறவுகோல் எந்நேரமும் செல்களின் கதவைத் தட்டிக் கொண்டே இருப்பதால், சோர்வடையும் செல்கள் தங்களின் மேல் உள்ள Insulin Receptors (பூட்டுகள்)-ஐ மழுங்கச் செய்து விடுகின்றன.
இன்சுலின் வந்து தட்டினாலும் செல்கள் கதவைத் திறப்பதில்லை. இதையே மருத்துவம் Insulin Resistance (இன்சுலின் எதிர்ப்புத் திறன்) என்கிறது.
இப்போது இரத்தத்தில் சர்க்கரையும் இருக்கிறது, இன்சுலினும் இருக்கிறது. ஆனால், கதவு திறக்காததால் சர்க்கரையால் செல்களுக்குள் போக முடிவதில்லை.
இதனால் உடலுக்கு ஆற்றல் கிடைக்காமல், சாப்பிட்ட பின்பும் உடல் சோர்வாகவே (Fatigue) இருக்கும்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் உடலைக் காப்பாற்ற கல்லீரல் (Liver) களம் இறங்குகிறது. இரத்தத்தில் இருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த அதிகப்படியான சர்க்கரையைத் துடைத்து எடுக்க, கல்லீரல் அந்த குளுக்கோஸை உறிஞ்சி, அதை உடனடியாக Triglycerides மற்றும் கொழுப்பு அமிலங்களாக (Fatty Acids) மாற்றத் தொடங்குகிறது.
இந்தச் செயல்முறைக்கு Lipogenesis என்று பெயர்.
இவ்வாறு உருவாக்கப்படும் கொழுப்பு முதலில் கல்லீரலிலேயே தங்கி நாளடைவில் Fatty Liver நோயை உருவாக்குகிறது.
அதன் பிறகும் கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிட்டால், அது வயிற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் நச்சுக் கொழுப்பாக (Visceral Fat – தொப்பை) சேமிக்கப்படுகிறது.
நீரிழிவில் பாதிக்கப்பட்டவர்களே…இப்பொழுதாவது புரிகிறதா உங்கள் தொப்பைக்கான காரணம்?
இந்த Visceral Fat அதிகரிக்க அதிகரிக்க, இன்சுலின் எதிர்ப்பு இன்னும் மோசமாகிறது.
Pancreas தொடர்ந்து வேலை செய்து ஒரு கட்டத்தில் முற்றிலுமாகச் சோர்வடைந்து (Beta Cell Burnout), இன்சுலின் சுரப்பதைக் குறைத்துவிடும்.
இந்த நிலையின் இறுதிப் புள்ளிதான், மருத்துவர்கள் நமக்குக் கொடுக்கும் “Type 2 Diabetes” என்ற சான்றிதழ்!
“நீரிழிவு என்பது அனைத்து நோய்களின் வேர்” (“Sugar is the Root Cause of All Diseases” ) என்று சும்மா ஒன்றும் சொல்லவில்லை. அது உடலில் எவ்வாறு அமைதியான அழிவை ஏற்படுத்துகிறது என்று பாருங்கள்:
இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை மற்றும் இன்சுலின், இரத்தநாளங்களின் உட்புறச் சுவர்களைச் சேதப்படுத்துகிறது.
இதனால் சேதமடைந்த பகுதியை குணப்படுத்த வந்த LDL எளிதில் சுவர்களில் பதிந்து, அடைப்பை (Plaque) உருவாக்குகிறது.
இரத்த நாளங்கள் தடிமனாகவும் கடினமாகவும் மாறுவதால் இரத்த அழுத்தம் உயர்கிறது.
இன்சுலின் எதிர்ப்பால் இரத்தக் கட்டிகள் எளிதில் உருவாகும் தன்மை அதிகரித்து, இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைத் தடுத்து மாரடைப்பை (Heart Attack) ஏற்படுத்துகிறது.
50 வயதில் எனது நண்பனுக்கு நேர்ந்ததும் இதுவே!
நவீன மருத்துவ உலகம் அவசர கால சிகிச்சைகளுக்கும் அறுவை சிகிச்சைகளுக்கும் பெரிதும் உதவுகிறது உண்மைதான் ஆனால், துரதிர்ஷ்டவசமாகப் பல வணிகமயமாக்கப்பட்ட மருத்துவ முறைகளில், நோய்க்கான மூல காரணத்தை (Root Cause) சரிசெய்வதை விட, மாத்திரைகள் மூலம் அறிகுறிகளைப் (Symptoms) கட்டுப்படுத்துவதற்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.
மாத்திரைகள் தற்காலிகமாக இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்துமே தவிர, இன்சுலின் எதிர்ப்பைக் குணப்படுத்தாது.
“கடவுள் நம் உடலை சுய-புதுப்பித்தல் அறிவுத் திறனுடன் (Repair Intelligence) படைத்துள்ளார். அதை நாம் முறையற்ற வாழ்க்கை முறையால் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்”
நீரிழிவு வந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டது, மருந்துகளுடனேயே வாழ வேண்டும் என்று பயந்து முடங்குபவர்களுக்கு நீரிழிவு என்பது ஒரு தண்டனை.
ஆனால், அதை ஒரு Warning Signal (எச்சரிக்கை மணி) ஆக எடுத்துக்கொண்டு உங்கள் வாழ்க்கை முறையை மாற்றினால், அதுவே உங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம்!
நீரிழிவு வந்ததால் life style change ன் மூலம் குணப்படுத்த விரும்புபவர்கள் மாவுச்சத்தைக் குறைத்து low carbs diet ற்கு மாறி , உடற்பயிற்சியுடன் விரதம் (Intermittent Fasting) இருக்கும் போது உடலில் பல அற்புதங்கள் நிகழ்கின்றன.
அதாவது நாம் உண்ணுவதை நிறுத்தி விரதம் இருக்கும் போது, உடலில் இன்சுலின் குறைகிறது. உடனே உடல் சர்க்கரையை எரிப்பதை நிறுத்திவிட்டு, தேவையற்ற கொழுப்புகளை எரிக்கும் நிலைக்குச் (Fat-burning mode) சுலபமாக மாறுகிறது.
Intermittent Fasting காலத்தில் ‘Autophagy ‘ என்னும் இயற்கை மருத்துவம் தூண்டப்படுகிறது.
உடலில் உள்ள பழைய புரதங்கள், Inflammationஐ உண்டாக்கும் நச்சுக் கழிவுகள் மற்றும் பழுதடைந்த செல்களை உடல் தானே அழித்து மறுசுழற்சி (Recycle) செய்கிறது.
இது வயதாகும் தன்மையைத் தடுத்து இளமையைப் பாதுகாக்கிறது (Anti-aging).
glucose குறையும் போது கொழுப்பு எரிக்கப்பட்டு உருவாகும் ketonesகள் , மூளைக்கும் உடலுக்கும் தூய்மையான எரிபொருளாகச் செயல்படுகின்றன.
உணவுக் கட்டுப்பாடு மற்றும் விரதத்தோடு உடற்பயிற்சியும் இணையும் பொழுது அசைக்கமுடியாத ஆரோக்கியம் கிடைக்கிறது.
உடற்பயிற்சி ஏன் அவசியமெனில்..
உடற்பயிற்சியின் போது, தசைகள் இன்சுலினின் உதவி இன்றியே இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை நேரடியாக உறிஞ்சி energy யாக பயன்படுத்துகின்றன.
உடற்பயிற்சி செய்வதன் மூலம் செல்களின் பூட்டுகள் திறக்கப்பட்டு, Insulin Sensitivity அதிகரிக்கிறது.
கல்லீரலிலும் தொப்பையிலும் தேங்கியுள்ள Visceral Fat கரைக்கப்பட்டு, நீரிழிவின் மூல காரணம் வேரறுக்கப்படுகிறது. Fatty liver disease ல் இருந்தும் விடுதலை கிடைக்கிறது.
இதில் முக்கியமானது உங்கள் life style மாற்றத்தின் ஊடாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும் போது, செல்களில் AGEs (Advanced Glycation End-products) எனப்படும் நச்சுப் பொருட்கள் உருவாவது குறைகிறது.
இது தோலில் சுருக்கங்கள் விழுவது தடுத்து நிறுத்தப்பட்டு இளமையான தோற்றம் நீடிக்கிறது.
இரத்த நாளங்கள், இதயம் மற்றும் சிறுநீரகங்களின் ஆயுள் நீடிக்கிறது.
மூளையின் சுறுசுறுப்பு அதிகரித்து, நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கிறது.
நண்பனின் இழப்பு நமக்குத் தரும் செய்தி ஒன்றுதான்: “விழித்துக் கொள், இல்லையேல் பின்நாளில் வருந்துவாய்!”
நீரிழிவு நோய் என்பது உடலை அழிக்கும் நோய் அல்ல, மாறாக, அது உங்கள் உடலைச் சரியாகப் பராமரிக்கச் சொல்லி உடல் தரும் கடைசி எச்சரிக்கை Signal !
நீரிழிவு நோயை ஒரு முற்றுப்புள்ளியாகப் பார்க்காமல், ஆரோக்கியமான வாழ்க்கையைத் தொடங்குவதற்கான ஒரு நல்வாய்ப்பாக (Positive Turning Point) எடுத்துக்கொள்ளுங்கள்.
Low-Carb உணவுகள், விரதம், மற்றும் தினசரி உடற்பயிற்சி என வாழ்க்கை முறையை மாற்றியமைத்தால், நீரிழிவு இல்லாதவர்களை விடவும் நீங்களே அதிக ஆரோக்கியத்தோடும், இளமையோடும், நீண்ட காலம் வாழ்வீர்கள்!

You must be logged in to post a comment.