Local

நீர் கட்டணத்தை செலுத்தாமல் மரணித்த 15 எம்.பிக்கள்!

ஒரு கோடியே 20 இலட்சம் ரூபா குடிநீர் கட்டண நிலுவையை செலுத்த வேண்டிய 76 எம்.பிக்களில் 15 பேர், 32 இலட்சம் ரூபா குடிநீர்க் கட்டணத்தை செலுத்தாமல் உயிரிழந்துள்ளதாக நீர் வழங்கல் சபை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இந்த நிலையில் அவர்களிடமிருந்து வரவேண்டிய தொகையை மீளப் பெறுவது கடினம் எனவும், தற்போது அமைச்சுப் பதவிகளை வகித்து வரும் எம்.பி.க்கள் கூட தங்களுடைய குடியிருப்புகளில் பாரியளவில் தண்ணீர் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சுப் பொறுப்புகளை வகிக்கும் எம்.பி.க்கள் உட்பட 34 பேர் குடிநீர் கட்டணமாக 44 இலட்சம் ரூபாவையும், தற்போது நாடாளுமன்ற பொறுப்புக்களை வகிக்காத 27 பேர் 41 இலட்சம் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

அவர்களிடமிருந்து இந்தப் பணத்தை மீட்பது பெரும் சவாலாக இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading