Local

நோபல் பரிசான லினியன் பதக்கத்தை வென்ற இலங்கையர்!

இயற்கை விஞ்ஞானத்திற்கான நோபல் பரிசு என அறியப்படும் லீனியன் பதக்கம் இம்முறை இலங்கை ஆராய்ச்சியாளரும் இயற்கை விஞ்ஞானியுமான கலாநிதி ரொஹான் பெதியாகொடவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள லீனியன் கழகத்தின் ஊடாக உலகம் முழுவதும் இருக்கும் சிறப்பு தாவரவியல் விஞ்ஞானிகள் மற்றும் விலங்கியல் விஞ்ஞானிகளுக்காக கடந்த 1888ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது.

இதன்படி, இந்த பதக்கம் இலங்கையர் ஒருவருக்கு முதன் முறையாக கிடைத்துள்ளது. இந்த பதக்கத்தை பெற்ற கலாநிதி ரொஹான் பெதியாகொட ஆசியாவில் இரண்டாவது ஆராய்ச்சியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயற்கை விஞ்ஞானி மட்டுமல்லாது கல்வியாளர் மற்றும் எழுத்தாளரான பெதியாகொட, சர்வதேச சிகப்பு புள்ளிவிபர குழுவின் பிரதித் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.

இலங்கை சுகாதார அமைச்சின் உயிரியல் மருத்துவ பொறியியல் பிரிவு, நீர் வளங்கள் சபை ஆகியவற்றில் பணியாற்றியுள்ள பெதியாகொட, இலங்கை தேயிலை சபையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இதேவேளை, லண்டனில் இயங்கும் லீனியன் கழகம் உலகில் தற்போது செயற்பட்டு வரும் இயற்கை வரலாற்றை ஆய்வு செய்து வரும் மிகப் பழமையான கழகமாகும்.

சுவீடன் நாட்டின் தேசிய இயற்கை விஞ்ஞானியான கால் லினேயஸ் (1707-1778) என்பவரை நினைவு கூரும் வகையில் லீனியன் கழகம் பெயரிடப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading