Local

பசியால் வாடும் பாடசாலை மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

பசியுடன் பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை தொழில் அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாடசாலை அடிப்படையிலான போஷாக்கு நடவடிக்கைகள் கூட ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அதன் தலைவர் சுஜீவ விமலரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

புத்தகங்கள், காலணிகள், சீருடைகளின் விலைகள் 200% உயர்ந்துள்ளதாகவும், உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

காலையில் பாடசாலைக் கூட்டத்தின் போது சில மாணவர்கள் மயங்கி கீழே விழுந்ததாகவும் அவர்கள் காலை உணவை உட்கொள்ளாதது தெரியவந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு வகுப்பில் நான்கைந்து மாணவர்கள் பட்டினியுடன் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களாக இருந்தனர். தற்போது பொருளா தார நெருக்கடியால் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமல் பெற்றோர் திணறுவதால் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading