Local

பசில் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திரு நடேசன் ஆகியோர் மல்வாளை சொத்து வழக்கின் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர அவர்களால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அததெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

தொம்பே, மல்வான மாபிட்டிகம பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியை விலைக்கு வாங்கி அங்கு பாரிய வீடு, நீச்சல் தடாகம், மற்றும் பண்ணை ஒன்றை பராமரித்து அரச நிதியை மோசடி செய்ததாக மூன்று குற்றச்சாட்டுக்களில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திரு நடேசன் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading