Local

பட்டப்பகலில் ஒருவர் சுட்டுக்கொலை! விசாரணை வேட்டையில் மூன்று பொலிஸ் குழுக்கள்!

தனமல்வில பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பான விசாரணைகளுக்கு மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட இடத்திலிருந்த சீ.சீ.ரி.வி கமறாவில் பதிவாகிய காட்சிகளை ஆதாரமாக கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

னமல்வில பகுதியில் நேற்று நண்பகல் 12.20 அளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 42 வயதான ஒருவர் உயிரிழந்ததுடன், 22 வயதான இளைஞனொருவர் காயமடைந்தார்.

இரண்டு மோட்டார் சைக்கில்களில் பயணித்தவர்களால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது.

துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர், பிணை வழங்கப்பட்ட ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading