Local

பண்டிகை காலத்தை முன்னிட்டு தாமரை கோபுரத்தின் இயக்க நேரத்தை நீடிக்கத் தீர்மானம்

கொழும்பு தாமரை கோபுரம் மேனேஜ்மென்ட் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் பண்டிகைக் காலத்திற்கான நீட்டிக்கப்பட்ட இயக்க நேரத்தை அறிவித்துள்ளது.

இதன்படி, தாமரை கோபுரம் டிசம்பர் மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் எனவும் டிசம்பர் 27 ஆம் திகதி காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி முதலாம் திகதியன்று காலை 9 மணி முதல் ஜனவரி 2 ஆம் திகதி பகல் 1 மணி வரை திறந்திருக்கும்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading