Up Country

பதுளை வைத்தியசாலையில் சீனப் பிரஜை உயிரிழப்பு

பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த சீன இனத்தைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.

பதுளை–பசறை பிரதான பாதையின் இரண்டாம் மைல் கல்லருகே வசித்துவந்த வோன் சீமன் என்ற 69 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையில் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இது குறித்து பதுளை அரசினர் மருத்துவமனை பிரதி வைத்திய அதிகாரி டாக்டர் ரன்ஜித் அமரகோனிடம் வினவியபோது,

“கடந்த 27 ஆம் திகதி மேற்படி நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நபர் சீன இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் நீண்டகாலமாக பதுளையில் வசித்துவந்ததுடன், இப்பகுதிபெண்ணொருவரையேதிருமணமும் செய்திருந்தார்.

இவரதுமரணத்தையடுத்து,எவரும் வீணாக பீதியையும், பதட்டத்தையும் அடையத் தேவையில்லை. மரணமானவரின் சடலம் குறித்தசட்டப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading