World

பறக்கும் விமானத்தில் பூனைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்ணால் பரபரப்பு!

அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் பெண் ஒருவர் பூனைக்கு தாய்ப்பால் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறித்த சம்பவம், அமெரிக்காவில், நியூயார்க்கின் சைராகுஸிலிருந்து ஜார்ஜியாவின் அட்லாண்டாவிற்கு சென்றுகொண்டிருந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்துள்ளது.

அந்த விமானத்தில், 13A இருக்கையில் இருந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், உடம்பில் ரோமங்களே இல்லாத ஒரு தனது வளர்ப்பு பூனையை, ஒரு துணியில் சுற்றி குழந்தையை வைத்திருப்பது போல் மடியில் வைத்து, தாய்ப்பால் கொடுத்துள்ளார்.

இந்தக் கட்சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள், அப்பெண் நடந்துஒல்லும் விதம் அருவருப்பாக இருப்பதாகவும், பயமாக இருப்பதாகவும் விமான பணியாளர்களிடம் புகார் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, விமான பணியாளர்கள் அப்பெண்ணிடம் பூனைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும் பூனையை மீண்டும் கேரியரில் வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

ஆனால், அவ்வாறு செய்ய மறுத்த அப்பெண், தொடர்ந்து பூனைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்தார். இதனால் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading