பறவைக் காய்ச்சலின் முதல் மனித தொற்று சீனாவில் கண்டுபிடிப்பு!

சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவில் 41 வயதான ஒருவர் H10N3 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் மனிதராக இனங்காணப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜென்ஜியாங் நகரில் வசிக்கும் இந்த நபர் காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகள் காரணமாக கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே மே 28 ஆம் திகதி இவருக்கு H10N3 வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது, ஆனால் இவருக்கு எவ்வாறு வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இவருடைய நெருங்கிய தொடர்புகளை மருத்துவ ஆய்வு செய்ததில் வேறு எவருக்கும் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை.
