World

பலஸ்தீனர்களின் நிலங்களை சூறையாடும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியில் உள்ள விவசாயிகள் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளினால் நாளாந்தம் ஊடுருவல் மற்றும் வன்முறைகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக தமது குடியிருப்புகள் மற்றும் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பலஸ்தீன விவசாயிகள் வாழ்ந்துவருவதாக குறிப்பிடப்படுகிறது.

இஸ்ரேலிய இராணுவம் ஒரு வாரத்தில் 10 பேரை கொன்றதுடன், 20 பேரை காயப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி முதல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேலியப் படைகளால் சுமார் 237 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், சுமார் 2,850 பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, பலஸ்தீனம் ஒலிவ் எண்ணெய் மற்றும் காய்கறிகளுக்கு பெயர்பெற்று காணப்படுகிறது.

அத்துடன், பலஸ்தீனத்தில் இருந்து ஒலிவ் எண்ணெய் மற்றும் காய்கறிகள் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், 1967 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுமார் 700,000 இஸ்ரேலியர்கள் பலஸ்தீன பகுதிகளில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர்.

இவ்வாறு குடியேறியவர்கள் பலஸ்தீனியர்கள் ஒலிவ் தோப்புகள், விவசாய நிலங்கள் மற்றும் சொத்துக்களை சூறையாடுவதுடன், அழித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading