Sports

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது 14 வயது சிறுமி பாலியல் புகார்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளரான யாஷிர் ஷா சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அணியின் பவுலரான யாஷிர் ஷா 46 டெஸ்ட் போட்டியில் விளையாடி 235 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். லெக் ஸ்ப்பினரான இவருக்கு பாகிஸ்தானில் நல்ல மதிப்பும், மரியாதையும் உண்டு. ஆனால் அது எல்லாம் தவிடு பொடியாகும் அளவுக்கு பெரிய மோசமான செயலை அரங்கேற்றி இருக்கிறார்.

இவர், 14 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த சிறுமி, காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கிறார். மேலும், அவர் அளித்த புகாரில் யாசிர் ஷாவின் நண்பர் பர்ஹான் என்னை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், நடந்த சம்பவத்தை அவர் வீடியோவாகவும் எடுத்து வைத்து என்னை மிரட்டத் தொடங்கினார்.

பின்னர், பர்ஹான் என்னை மிரட்டுவது குறித்து அவரின் நண்பரான கிரிக்கெட் வீரர் யாசிர் ஷாவுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். ஆனால் அவர் என்னை ஏளனம் செய்து சிரித்தார். நடந்த சம்பவங்கள் குறித்து உயர் அதிகாரிகள் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது எனவும் அவருக்கு மிகவும் செல்வாக்கான நபர்களின் தொடர்பு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து, உயர் அதிகாரிகளையும் நன்றாக தெரியும் என அவர் தெரிவித்தார். எனவே இது குறித்து புகார் தெரிவித்தால் உன்னுடைய ஆபாச வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என அவரும் என்னை மிரட்டினார் தெரிவித்து இருக்கிறார்.

இதனால், யாசிர் ஷா மற்றும் அவரது நண்பர் பர்ஹான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஷாலிமார் காவல் நிலையத்தில் அந்த சிறுமி புகார் அளித்துள்ளார். மேலும், போலீசில் புகார் அளித்த பின்பு, யாசிர் ஷா தன்னை தொடர்பு கொண்டு உனக்கு ஒரு பிளாட் வீடும், மாதம் மாதம் பணமும் தருவதாக கூறினார் என சிறுமி தெரிவித்துள்ளார். இந்த புகாரால், கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா மீதான புகார் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading