Uncategorized

பாக்டீரியாவில் ஓடும் வாகனங்கள் – ஆய்வாளர்களின் அபூர்வ கண்டுபிடிப்பு

 

ஆஸ்திரேலியாவில் மண்ணில் இருக்கும் பாக்டீரியா மின்சாரத்தை உற்பத்தி செய்வதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மொனாஷ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு மின்சாரம் குறித்த ஆராய்ச்சில் ஈடுபட்டு இருந்த போது இதனை கண்டுபிடித்துள்ளனர்.

மண்ணில் இருக்கும் பாக்டீரியாக்கள் காற்றில் உள்ள ஹைட்ரஜனை கொண்டு மின்சாரம் தயாரிப்பதை கண்டறிந்துள்ளனர்.

அண்டார்டிகா மாதிரியான பிரதேசம் முதல் எரிமலையை தன்னுள் வைத்திருக்கும் மலைகள் மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் வசிக்கும் பாக்டீரியாக்கள், காற்றில் இருக்கும் ஹைட்ரஜனை கொண்டு வளர்வது இயல்பான ஒன்றாகும்.

ஹைட்ரஜனை எப்படி மின்சாரமாக மாற்றுகின்றன என்பதை ஆய்வாளர்கள் தற்போது கண்டறிந்து உள்ளனர்.

பாக்டீரியாக்களில் உள்ள ஹக் என்ற என்சைம்கள் மெல்லிய காற்றில் இருக்கும் ஹைட்ரஜனை பிரித்து எடுக்கின்றன. அந்த என்சைம்கள் மின்சாரத்தை தயாரித்து சேமித்து வைத்திருக்கும் நிலையில்.அவைகளை தனியாக பிரிக்க முடியும் என அறிவியலாலர்கள் கூறுகின்றனர்.

நீண்ட காலத்திற்கு உறைந்த நிலையிலோ அல்லது 80 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலோ அந்த என்சைம்களை, அதில் இருக்கும் மின்சக்தி சேதம் அடையாமல் பாதுகாத்து வைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அந்த என்சைம்களை ஒரு இயற்கை பேட்டரி என அழைக்கும் விஞ்ஞானிகள் முதற்கட்டமாக சூரிய ஒளியில் இயங்கும் இயந்திரங்களை இந்த வகை பாக்டீரியாவில் இருந்து தயாரிக்கும் மின்சாரத்தை கொண்டு இயக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

இச்சோதனை வெற்றி பெற்றால் எதிர்காலத்தில் பாக்டீரியா மூலம் மின்சார வாகனங்கள் தயாரிக்கவும் வழி வகுக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading