Local

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை!

அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் தமிழ் மொழிப்  பாடசாலைகளின் முதலாவது தவணை, நாளை  (05) வௌ்ளிக்கிழமை நிறைவடைவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த  பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறையின் பின்னர், மீண்டும் எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை  இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காகத்  திறக்கப்படும் என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் பாடசாலைத் தவணை, ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வியாழக்கிழமை  நிறைவடைகிறது.
முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம்  தவணைக்கான கல்வி நடவடிக்கைகள்,  ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading