Local

பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது!

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை நடைபெறும் காலப் பகுதிக்குள் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பிலான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி, உயர் தர பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் ஆரம்ப வகுப்புக்களை தவிர, ஏனைய வகுப்புக்களுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் பாடசாலை நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக மேலதிக செயலாளர் L.K. ஏகொடவெலவின் கையொப்பத்துடன், அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் 04ம் திகதி முதல் மார்ச் மாதம் 06ம் திகதி வரை ஆரம்ப வகுக்களை தவிர்ந்த ஏனைய அனைத்து வகுப்புக்களுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயர்தர பரீட்சை நடைபெறும் போது, அதற்கு இடையூறு ஏற்படும் பாடசாலைகள் இருக்கும் பட்சத்தில், அவ்வாறான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் மாகாண கல்வி பணிப்பாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading