Local

பாடசாலை மாணவி 2 மாத கர்ப்பமான நிலையில் திடீரென உயிரிழப்பு!

யாழ்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்று வரும் கரவெட்டி கிழவிதோட்டத்தினை சேர்ந்த தனபாலசிங்கம் விஷ்ணுகா (வயது- 18) எனும் மாணவி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவி இரண்டு மாத கர்ப்பமென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த மாணவி திடீரென சுகவீனமுற்றதாகத் தெரிவித்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் மாணவி இரண்டு மாதங்கள் கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்தசம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading