World

பாம்பை வைத்து ஸ்கிப்பிங் செய்த வாலிபர்!

இளைஞர் ஒருவர் பாம்பை வைத்து ஸ்கிப்பிங் செய்யும் வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வருகின்றது.

ஸ்கிப்பிங் விளையாட கயிற்றை பயன்படுத்துவார்கள். ஆனால் அண்மையில் ஒருவர் ஒரு பெரிய பாம்பை எடுத்து ஸ்கிப்பிங் விளையாடிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் குப்பை கொட்டும் பகுதியில் இருந்த பாம்பை ஒரு இளைஞர் தனது இரண்டு கைகளால் பிடித்து ஸ்கிப்பிங் விளையாடுகின்றார். பின்னர் அதை அதை தூக்கி போட குப்பை இருக்கும் பகுதிக்குள் செல்கிறார். 

இந்த சம்பவம் மும்பையை அடுத்த பால்கர் என்ற பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. பின்னர் இது குறித்து விசாரித்த போது அவர் செத்து போன பாம்பை எடுத்து தான் ஸ்கிப்பிங் விளையாடியுள்ளார். என்பது தெரியவந்தது.

இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இருந்தாலும், இளைஞரின் இந்த செயலுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading