Local

பாராளுமன்ற உறுப்பினர்களை கொல்ல மக்கள் விரும்புகின்றனர்!

தற்போதைய சூழ்நிலை காரணமாக இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகத்தை பேணுவது கடினமாக உள்ளது என்று தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் கொல்ல விரும்புகிறார்கள் என்று தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் குழுவொன்றிடம் உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

தனது பாராளுமன்ற பதவிக் காலத்தில் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு எம்.பிக்கள் சிரமப்படுகின்றனர் என்றும் கூறினார்.

யாழ்ப்பாண மாவட்ட எம்.பி ஒருவர் ஒரு நாள் அமர்வில் கலந்துகொள்வதற்கு 62,000 ரூபாயும் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு 42000 ரூபாயும் செலவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading