Local

பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்திற்கு அனுமதி

பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை (நீக்குதல்) நீக்குவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

தேசிய அரச சபையின் 1971 ஆம் ஆண்டின் இலக்கம் 1 கொண்ட பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்கு, 2025-06-16 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளித்த அனைத்து இலங்கையர்களுக்கும் அரசாங்கம் அளித்த வாக்குறுதியின்படி, பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய உரிமையை ரத்துச் செய்வதை நோக்கமாகக் கொண்டு சட்ட வரைஞரால் இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.

இதன்படி, குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வௌியிடுவதற்கும், அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading