Sports

பாலியல் புகார் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித்தலைவர் பதவி விலகல்!

பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்ததையடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து டிம் பெயின் விலகியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்காக டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. அப்போது டிம் பெயினைஅணித்தலைவராக  நியமித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். அதன் பின்பு அப்போதே பெண் ஒருவர் டிம் பெய்ன் தனக்கு ஆபாச புகைப்படங்களையும் மெஸேஜ்களையும் அனுப்பியதாக புகார் அளித்தார். ஆனால் அதன் பின்பு இவ்விவகாரத்தில் டிம் பெய்ன் மீது குற்றமில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இவ்விவகாரம் மீண்டும் பூதாரமாக வெடித்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டிம் பெய்ன் விலகியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர் “இது நம்ப முடியாத முடிவு. ஆனால் எனக்கும், எனது குடும்பத்திற்கும், கிரிக்கெட்டிற்கும் சரியான முடிவு. நடந்த சம்பவம் குறித்து அப்போது நான் வருந்தினேன். இன்றும் வருந்துகிறேன். எனது குடும்பம் என்னை மன்னித்துவிட்டனர். இந்தச் சம்பவம் பொது வெளியில் பெரிய பேசு பொருளாகும் என்பதை சில வாரங்களுக்கு முன்பு அறிந்தேன்” என்றார்.

மேலும் ” எனது மனைவி, குடும்பத்தினர் மற்றும் இதர தரப்பினருக்கு நான் காயத்தை ஏற்படுத்தியதற்காக வருந்துகிறேன். இதனால், நமது ஆஸ்திரேலிய அணியின் நற்பெயருக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் வருந்துகிறேன். உடனடியாக கேப்டன் பதவியிலிருந்து விலகுவதுதான் சரியான முடிவு என நான் நம்புகிறேன். ஆஷஸ் தொடருக்கு முன்னால், பெரிய சர்ச்சையை உருவாக்க நான் விரும்பவில்லை” என குறிப்பிட்டுள்ளார் டிம் பெய்ன்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading