World

பாலைவனததை பசுமையாக்கும் Saudi arabia

பாலைவனத்தைப் பசுமையாக்கும் சவுதி அரேபியா – 1000 கோடி மரங்களை நடும் பிரம்மாண்ட திட்டம்!

உலகிலேயே மிகவும் லட்சியமான காடுகளை உருவாக்கும் திட்டங்களில் ஒன்று தற்போது அரேபியப் பாலைவனத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சவுதி அரேபியாவின் ‘சவுதி பசுமை முயற்சி’ மற்றும் ‘மத்திய கிழக்கு பசுமை முயற்சி’ ஆகியவற்றின் ஒரு பகுதியாக 10 பில்லியன் (1000 கோடி) மரங்களை நடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தரம் குறைந்த நிலங்களை மீட்டெடுப்பது, புழுதிப் புயல்களைக் குறைப்பது மற்றும் கார்பன் வெளியேற்றத்தை உறிஞ்சும் நாட்டின் திறனை வலுப்படுத்துவதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

வறண்ட காலநிலை, அளவுக்கு அதிகமான கால்நடை மேய்ச்சல் மற்றும் நிலச் சீரழிவு காரணமாக இப்பிராந்தியம் நீண்டகாலமாக பாலைவனமாதல் (Desertification) சவாலை எதிர்கொண்டு வருகிறது. எனினும், சுமார் 7.4 கோடி ஹெக்டேர் நிலப்பரப்பை இத்திட்டத்தின் மூலம் சீரமைப்பதன் மூலம், வரும் தசாப்தங்களில் சுற்றுச்சூழலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

பாலைவனச் சூழலில் இவ்வளவு பெரிய அளவிலான மரங்களை நடுவதற்குத் துல்லியமான திட்டமிடல் அவசியம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள்:

குறைந்த நீரைப் பயன்படுத்தி மரங்களை வளர்க்கும் தொழில்நுட்பம்.

சூழலியல் சமநிலையைப் பாதிக்காத வகையில், வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய உள்ளூர் நாட்டு மரங்களைத் தேர்ந்தெடுத்தல்.

நடப்படும் மரங்களின் பிழைப்பு விகிதம் மற்றும் முறையான நீர்ப்பாசன முறைகள்.

வெறுமனே நடப்படும் மரங்களின் எண்ணிக்கையை விட, அவை எவ்வளவு காலம் உயிர்வாழ்கின்றன மற்றும் நவீன நீர்ப்பாசன முறைகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதிலேயே இத்திட்டத்தின் உண்மையான வெற்றி தங்கியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading