Local

பா. உ.225 பேரும் இரண்டு நாட்கள் சாப்பிடாமல் இருந்து பார்க்கட்டும்!

இலங்கையின் பொருளாதாரம், கொரோனவினால் வீழ்ச்சியடையவில்லை. மாறாக பிழையான பொருளாதார கொள்கைகளே காரணம் என்று பேராசிரியை சந்திமா விஜயகுணவர்த்தன தொிவித்துள்ளார்

கொழும்பில் இன்று இடம்பெற்ற சமூக, சமதான கேந்திர நிலையத்தின் நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களும் இரண்டு நாட்களுக்கு உணவு எதனையும் உட்கொள்ளாமல், பசியோடிருந்து உடல் நடுங்கும் நிலையை உணர்ந்து, இந்த நாட்டில் தாய்மார், தமது பிள்ளைகளுக்காக படும் வேதனையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.

இன்று நாட்டில் தாய்மார், தமது பி்ள்ளைகளுக்கு உணவு தேடி, காவல்துறை நிலையங்களுக்கு செல்கின்றனர்.

தன்னார்வு நிறுவனங்களிடம் கையேந்தி நிற்கின்றனர்.

அத்துடன் கிடைத்ததை உண்ணும் நிலைக்கு சென்றுள்ளதாக சந்திமா குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவினால் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது என்று யாரும் கூறமுடியாது.

அருகில் உள்ள தமிழ் நாட்டில் கொரோனா காலத்தில் 100 வீத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது

கேரளாவில் 110 வீத வளா்ச்சி ஏற்பட்டுள்ளது.

எனினும் 2500 வருட கால உணவு உற்பத்தியை மேற்கொண்டு வரும் இலங்கையில் இன்று உணவில்லாத நிலங்களே எஞ்சியுள்ளன. முன்வைக்கப்படும் கொள்கைகள் யாவும், ஏனைய நாடுகளின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.

விலைமாதர் விடயத்தை சட்டமாக்கவேண்டும் என்ற அளவுக்கு இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனையை முன்வைக்கின்றனர்.

உடல் முழுதையும் மறைக்கும் நாகரீகத்தைக்கொண்ட இந்த நாட்டில் நாடாளுமன்றத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படுவதை எவ்வாறு ஏற்கமுடியும் என்று சந்திமா கேள்வி எழுப்பினார்

துட்டகைமுன மன்னர் நாட்டை ஒன்றுப்படுத்தினார் என்ற வகையில் பேசப்படுகிறார்.

ஆனால் இன்று நாட்டை விற்பனை செய்தவர்கள் என்ற பெயரை ஆட்சி செய்பவர்கள் பெறப்போகிறார்கள்.

டொலர் இல்லையென்று கூறிக்கொண்டிருந்தால், எவரும் மலர் கொத்துடன் வந்து டொலர்களை தரமாட்டார்கள்.

அதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.

இலங்கையை சுற்றியுள்ள கடல் வளத்தைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய வாய்ப்பிருக்கின்றபோதும் அதனை பற்றி எவருமே சிந்திக்கவில்லை.

இந்தநிலையில் நாட்டுக்கு தேவையான விடயங்களை நிறைவேற்றாது, நிலங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதன் காரணமாக, இந்த நிலம் கூட பொறுமையாக இருக்காது என்றும் பேராசிரியை சந்திமா விஜயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.      

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading