Local

பிரதமர் பதவியை ஏற்க தயார் சஜித் பிரேமதாச மீண்டும் தெரிவிப்பு!

பிரதமராக பதவியேற்க தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அதிகாரத்திற்காக ஒருபோதும் கொள்கைகளை காட்டிக்கொடுக்கமாட்டேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நான் பொறுப்பேற்க முடியாது என்று கூறவில்லை. இன்றும் பிரதமராக பதவியேற்க நான் தயாராக இருக்கிறேன்.

நான் பிரதமராக பதவியேற்று தூய்மையான ஆட்சியை செயல்படுத்த விரும்புகிறேன், ஆனால் துரோகங்களை அனுமதிக்க மாட்டோம்.

நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், நான் இப்போது என் தந்தையைப் போல் மிகவும் நிதானமானவன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading