Local

பிரதமர் மஹிந்தவின் வீட்டு சுவரை எதிர்ப்பு பலவகையாக மாற்றிய மாணவர்கள்!

விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் சுவரில் பல்வேறு சுலோகங்களை எழுதி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டக்காரர்கள் சுவரை எதிர்ப்பு பலகையாக மாற்றியுள்ளனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (24) பிற்பகல் கொழும்பு கோட்டையில் இருந்து காலி முகத்திடல் வரை பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களின் பங்குபற்றுதலுடன் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading