பிரதமர் மஹிந்த அதிகளவு ஈடுபாட்டை காண்பிக்கவேண்டும் ஜனாதிபதி தெரிவிப்பு!

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனக்கு அரசியல் அனுபவம் குறைவு என்பதால் பிரதமர் மகிந்த ராஜபக்ச அதிகளவு ஈடுபாட்டை காண்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்டகால வரலாற்றை கொண்ட அரசியல் குடும்ப உறுப்பினராக தான் காணப்பட்டாலும் தனக்கு தனிப்பட்ட அரசியல் அனுபவம் எதுவுமில்லை என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் பலவருட அரசியல் அனுபவத்தை கொண் பிரதமரிடமிருந்து அதிக ஈடுபாட்டை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியான பின்னரே பல அனுபவங்களை உள்வாங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
