பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார் !
இந்திய நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81. கடந்த 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த டெல்லி கணேஷ் நேற்று இரவு 11.30 மணியளவில் அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது.
அவரது மறைவை தொடர்ந்து இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள டெல்லி கணேஷ் உடலுக்கு பிரபலங்கள் பலரும் நேரில் வந்த அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இயக்குநர் லிங்குசாமி மறைந்த டெல்லி கணேஷ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு ‘ஆனந்தம்’ படத்தின் போது டெல்லி கணேஷ் உடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
டெல்லி கணேஷ் இடத்தை யாரும் நிரப்ப முடியாது என்று இயக்குநர் ரமணா தெரிவித்தார்.

You must be logged in to post a comment.