Cinema

பிரபல நடிகை கெளதமியின் 6 வங்கி கணக்குகள் முடக்கம்!

நடிகை கெளதமியின் 6 வங்கி கணக்குகளை உயர்நீதிமன்றம் முடக்கிய நிலையில் அதிரடி உத்தரவும் பிறப்பித்துள்ளது.

நடிகை கெளதமி ஸ்ரீ பெரும்புதூர் அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை கடந்த 2016 ம் ஆண்டு 4 கோடியே 10 லட்சம் ரூபாய் விற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

கெளதமிக்கு நீதிபதி உத்தரவு
இதனையடுத்து, விவசாய நிலத்தின் வருவாய் 11 கோடியே 17 லட்சம் என மதிப்பீட்டு உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில், தனது ஆறு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், இதனால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுபட்டுள்ளதால் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மூலதன ஆதாய வரியில் 25 சதவீதம் செலுத்திய பிறகு, நடிகை கௌதமியின் முடக்கப்பட்ட கணக்குகளை விடுவிக்கும்படி வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், 4 வாரங்களுக்குள் மீதி கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், மதிப்பீட்டு உத்தரவின் செயல்பாடுகளையும் நிறுத்திவைத்த நீதிபதி, வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading