Local

புதிய அரசின் கொள்கைப் பிரகடன உரை குறித்து விசேட அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள 10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்ளை பிரகடனத்தை  பிற்பகல் 3.00 மணிக்கு சமர்ப்பிக்கவுள்ளார்.

பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

பாராளுமன்றக் கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும், பாராளுமன்றத்தின் ஆரம்பக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாக பாராளுமன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பாராளுமன்றத்தின் ஒவ்வொரு புதிய கூட்டத் தொடரின் தொடக்கத்திலும் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கிறார்.

இதன்போது, ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக தனது அரசாங்கத்தின் பார்வை பற்றிய விரிவான பகுப்பாய்வை பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் வழங்கவுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading