Local

புதிய வைரஸால் கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்து விடும்!

உலகை தற்போது அச்சுறுத்தி வரும் புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரான் வைரஸால், கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்துவிடும் என்று ரஷ்ய நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முதன் முதலில் சீனாவில் கண்டுபிடிக்க கொரோனா வைரஸ், அதன் பின் ஒவ்வொரு நாடுகளிலும் பரவியதால், இதைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு,  பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், உலகில் பரவ துவங்கியுள்ளது. இது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இந்த வைரஸ் தீவிரமாக பரவும் தன்மை கொண்டது, ஆபத்தானது என்று கூறப்படுவதால், மக்கள் பீதியில் உள்ளனர்.

இந்நிலையில், ரஷ்ய நிபுணர் உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உருவாக்கிய ரஷியாவின் கமலேயா தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் நிபுணர் பேராசிரியர் அனட்டோலி ஆல்ட்ஸ்டீன் கூறுகையில், தற்போது பரவியிருக்கும் இந்த வைரஸால், டெல்டா வைரஸ் போய்விடும்.

டெல்டா வைரஸ் இருந்த இடத்தில், ஒமைக்ரான் வைரஸ் வந்துவிடலாம். ஆனால் இந்த பெருந்தொற்று அவ்வளவு ஆபத்தானது அல்ல. தற்போது 3 சதவீதம்பேர் மட்டுமே இறந்துள்ளனர்,.

எனவே, ஒமைக்ரான் வைரஸ் பரவினால், நோய் கிருமித்தன்மை குறைய வாய்ப்பு உண்டு. கொரோனா வைரஸ் காய்ச்சலுடன் ஒப்பிடத்தக்கது என்ற நிலைக்கு வந்தால், நாங்கள் பெருந்தொற்று முடிவுக்கு வந்து விடுவதாக கருதுவோம். எனவே இந்த பெருந்தொற்று, ஒமைக்ரானுடன் முடிவுக்கு வந்த விட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading