Gossip

புது மனைவியை முதியவருக்கு விற்று ஸ்மார்ட் போன் வாங்கிய கணவன்!

ராஜஸ்தானில் தனது மனைவியை முதியவருக்கு விற்ற 17 வயது கணவனை ஒடிசா போலீசார் கைது செய்தனர். 

ஒடிசா மாநிலம் பலங்கிர் மாவட்டம் பெல்பாடா பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண்ணை காதலித்து 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் கொண்டுள்ளார். ராஜேஷ் தனது மனைவியை அழைத்துக்கொண்டு கூலி வேலைக்காக ராஜஸ்தான் சென்றுள்ளார். 

அப்போது, தனக்கு அறிமுகமான 55 வயதானவருக்கு 26 வயது மனைவியை ரூ.1,80,000க்கு விற்றுள்ளார் ராஜேஷ். அந்த பணத்தை வைத்துக்கொண்டு நன்றாக சாப்பிட்டுள்ளார். மேலும் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கியுள்ளார். ராஜேஷ் மட்டும் தனியாக சொந்த ஊர் திரும்பியதால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். 

போலீசார் நடத்திய விசாரணையில் ராஜேஷ் தனது மனைவியை விற்றது தெரியவந்தது. உடனடியாக போலீசார் ராஜஸ்தானுக்கு சென்றுள்ளனர். விற்கப்பட்ட பெண் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ராஜஸ்தான் கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் அந்த பெண் அனுப்ப மறுப்பு தெரிவித்தனர். முதியவர் பணத்தை தந்துவிட்டு அந்த பெண் அழைத்துச் செல்ல வேண்டுமென கூறியுள்ளனர். 

இந்த நிலையில், ராஜஸ்தான் காவல்துறையின் உதவியுடன் ஒடிசா போலீசார் அந்த பெண்ணை மீட்டனர். ராஜேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை சிறுவனர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading